உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை : காந்திபுரத்தில் தடை செய்யப்பட்ட, 89 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், டீக்கடை உரிமையாளரை கைது செய்தனர்.காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா, எஸ்.ஐ., அய்யாசாமி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் குட்கா மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக, கடைகளில் சோதனை நடத்தினர்.காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 8வது வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உட்பட, 89 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.கடை உரிமையாளர் தினேஷ் குமார் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கடையை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை