| ADDED : ஜூலை 26, 2024 11:22 PM
கோவை;கோவை ரேஸ்கோர்ஸ் டி.ஆர்.ஓ., காம்பவுண்ட் பகுதியில், ஆடி மாத காற்றில் முறிந்த விழுந்த சந்தன மரம் அப்புறப்படுத்தாமல் இரண்டு நாட்களாக கிடக்கிறது.அருகில் குடியிருப்பவர்கள் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தன மரம் விழுந்து கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த மரத்தின் மையப் பகுதிகளில் கம்பி கட்டி, கிளைகள் கீழே விழாதவாறு தயார் நிலையில் வைத்துள்ளனர்.ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடிக்கடி சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. கடந்த வருடம் கலெக்டர் வீட்டிலிருந்த சந்தன மரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். ஆனாலும் போலீசாரும், வனத்துறையும் அலட்சியமாக இருப்பது புரியாத மர்மமாக உள்ளது.தற்போது முறிந்து விழுந்துள்ள சந்தன மரம், மாவட்ட வன அலுவலர் வீட்டு வாசலில் என்பதுதான் 'ஹைலைட்!'