உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்வாய் கட்ட குழி தோண்டி ஒரு மாதமாச்சு! பணி நிறைவு செய்யாததால் பாதிப்பு

கால்வாய் கட்ட குழி தோண்டி ஒரு மாதமாச்சு! பணி நிறைவு செய்யாததால் பாதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டி ஒரு மாதமாகியும் பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு, பஸ்ஸ்டாப் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர். இதனால், போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் உள்ளது.இந்நிலையில், இந்த ரோடு திரும்பும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவர் இல்லாததால், விபத்து அபாயம் நிலவியது.பாலத்தை சீரமைத்தல் மற்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக, கடந்த, ஒரு மாதத்துக்கு முன் குழி தோண்டப்பட்டது. அதன்பின், பணிகள் முழு வீச்சில் நடைபெறாமல் மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறியதாவது:சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக ஒரு மாதத்துக்கு முன் குழி தோண்டப்பட்டது. அதன்பின் பணிகள் முழு வீச்சில் நடக்காமல் மந்த கதியில் நடக்கிறது.கடைக்கு முன் குழி தோண்டப்பட்டுள்ளதால், வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கடைகள் விடுமுறை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.வாகனங்களில் வரும் பொருட்களை, கடைக்கு கொண்டு செல்வதிலும், கடையில் இருந்து பொருட்களை பல இடங்களுக்கு அனுப்புவதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வியாபாரமே முற்றிலுமாக பாதித்துள்ளது கவலை அளிக்கிறது.இந்த குழியால் விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி