| ADDED : ஆக 06, 2024 07:07 AM
கோவை: பாரதிய வித்யா பவன் மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில், ஒரு வார கலைத்திருவிழா ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவனில், வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.பாரதிய வித்யா பவன் மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில், 'வர்ஷா' என்ற பெயரில், மழையை கொண்டாடும் வகையில்,ஒரு வார கலைத்திருவிழா நடக்கிறது.நேற்று, சிவாஞ்சலி நடன குழுவினர், 'உப்பாசனா அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்' மற்றும் ஸ்ரீ கோரிஸ் சாஜி வர்கீஸ் குழுவினர் ஆகியோரின், மூன்று நடன நிகழ்ச்சிகள்நடந்தன.இதில் மழையின் நன்மை, தீமைகள், மழையால் மனிதர்களுக்கு ஏற்படும் உணர்வுகள் மற்றும் மழையை, ஒரு கதாநாயகி போலவும் சித்தரித்து நடனம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில், பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், செயலாளர் அழகிரிசாமி, துணை தலைவர் பாலசுப்ரமணியம், பாரதிய வித்யா பவன் பெங்களூரு கேந்திராவின் இணை இயக்குனர் நாகலட்சுமிராவ் ஆகியோர் பங்கேற்றனர்.