உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை

மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில், கல்லார் அருகே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஊட்டி மற்றும் கர்நாடக, கேரளா மாநிலங்களுக்கு செல்வதற்கு மேட்டுப்பாளையம்--குன்னுார் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தச் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்துஉள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் முதல் கல்லார் வரை சாலைகள் நேராக செல்வதாலும், கொண்டை ஊசி வளைவுகள் இல்லாததாலும், அங்கு வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்தவனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இங்கு உலா வருகின்றன. இதில் கல்லார் பகுதி யானைகள் வழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் ஓடந்துறை செக்போஸ்ட் முதல் கல்லார் வனச்சோதனை சாவடி வரை யானைகள், மான் நடமாட்டம் அதிகம் இருக்கும். வனவிலங்குகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பவானி ஆற்று பாலம் முதல் கல்லார் வரையிலான சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையினர் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில், யானைகளின் வழித்தடமாக கருத்தப்படும் துாரிபாலம் முதல் கல்லார் வரையிலான சாலையில் ஒளிரும் விளக்குகள், பேரிகார்டு அமைத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.இதனால் வாகன ஓட்டிகளும், வனவிலங்குகளும் விபத்தில் சிக்கும் அபாயம் குறையும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்