உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஞ்சாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை; எச்.எம்.எஸ்., கோரிக்கை

பஞ்சாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை; எச்.எம்.எஸ்., கோரிக்கை

கோவை:தியாகி என்.ஜி. ராமசாமியின், 113வது பிறந்த நாள் விழா, கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின், 87வது ஆண்டு மாநாடு, மகளிர் தின விழா என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. வரதராஜபுரத்தில் நடந்த விழாவில், எச்.எம்.எஸ்., தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார்.சங்கத் தலைவர் ராஜாமணி, செயலாளர்(பொ) மனோகரன் முன்னிலையில், கொரோனா சமயத்தில் மூடப்பட்ட என்.டி.சி., பஞ்சாலைகளைமீண்டும் இயக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி காலத்தில், 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதம் தோறும், 10ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்கள், 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது, உரிய தேதியில் புதுப்பிக்கப்படவில்லை என, காரணம் காட்டி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.இந்த நடைமுறையை கைவிட்டு, 60 வயது கடந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ