உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்

காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்

கிணத்துக்கடவு;ஆடி பட்டம் துவங்க உள்ளதால், காய்கறி பயிர்களை விவசாயம் செய்ய ஏற்ற தருணம் என இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.கிணத்துக்கடவு வட்டாரத்தில் பெரும்பாலும் தென்னை விவசாயமே அதிக அளவில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, காய்கறிகள் சாகுபடி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. ஆடிப்பட்டம் துவங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில், வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக் காய், பச்சைமிளகாய், தக்காளி, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவைகளை பயிர் செய்யலாம்.தென்மேற்கு பருவமழை காலத்தில், குளிர்ந்த காற்று வீசும் போது மண்ணில் ஈரப்பதம் காணப்படும். இதனால் காய்கள் நன்கு வளரும். மேலும், ஐந்தடுக்கு பயிர் முறையை பின்பற்றும் போது நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைந்த அளவே இருக்கும்.இந்த காலகட்டத்தில் காய்கறிகளை வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களிலும் பயிர் செய்யலாம், என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை