கோவை;கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழுள்ள பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 12 துவக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல் நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன.பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 11 துவக்கப்பள்ளிகள், 2 நடுநிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில், 20 சதவீத முன்னுரிமை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில், 75 சதவீத முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில், அரசு பள்ளியில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.கல்வி உதவித்தொகை, இலவச நோட்டு, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, அருகிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் சேர்த்து, கல்வி கற்கச் செய்ய வேண்டுமென பெற்றோருக்கு, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.