உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நங்கையரை கவரும் தங்க வைர  நகை கண்காட்சி 

நங்கையரை கவரும் தங்க வைர  நகை கண்காட்சி 

கோவை:கேப்ஸ் கோல்டு நிறுவனத்தின் ஓர் அங்கமான, கலாஷா பைன் ஜூவல்ஸ் சார்பில், மூன்று நாள் தங்க, வைர நகை கண்காட்சி, நேற்று ரெசிடென்சி ஹோட்டலில் துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, தங்கம், வைரம், ஜடாவு, போல்கா நகைகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு டிசைன்களில் அனைத்து ஆடைகளுக்கும் ஏற்ற கம்மல், ஒட்டியாணம், நெத்திசூடி, ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட அனைத்து நகைகளும், நுட்பமான வேலைப்பாடுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருமண நகைகள் இக்கண்காட்சியின் தனிசிறப்பாக அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பிரத்யேகமாக வடிவமைத்து கொடுக்க புக்கிங் எடுக்கப்படுகிறது. பாரம்பரிய டிசைன்கள் மட்டுமின்றி, அல்ட்ரா டிசைன் நகைகளையும் காணலாம். துவக்கவிழா நிகழ்வில், கலாஷா இயக்குனர் அபிஷேக் சந்தா, ரத்தினம் குழும இயக்குனர் சீமா செந்தில், பிரிக்கால் ஹோல்டிங் நிர்வாக இயக்குனர் லட்சுமி மோகன், ஸ்பார்க்ளர்ஸ் பேட்மிட்டன் அகாடமி உரிமையாளர் லட்சுமி மோகன், கார்த்திகை டெக்ஸ்டைல் மில்ஸ் கீர்த்தனா மனோஜ், நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி