உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / (விவசாய செய்திகள்) கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

(விவசாய செய்திகள்) கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

சூலூர்:சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மையத்தில் வரும், 27 ம்தேதி கால்நடை வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அறிக்கை:நடப்பாண்டுக்கான கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும், 27 ம்தேதி, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது. காலை, 10:30 மணி முதல், மாலை, 5:00 வரை நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள், மையத்தை நேரிலோ அல்லது 0422 - 2669965 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கால்நடைத்துறை வல்லுனர்கள் அளிக்கும் பயிற்சியில் அனைவரும் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை