உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகில இந்திய டென்னிஸ் போட்டி; தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

அகில இந்திய டென்னிஸ் போட்டி; தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

கோவை : அகில இந்திய டென்னிஸ் போட்டியில், தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.காளப்பட்டி சாலையில் உள்ள, லிவோ ஸ்போர்டஸ் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் ரேங்கிங் டென்னிஸ் போட்டி ஜூலை, 29ம் தேதி துவங்கி ஆக., 3ம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.நேற்று முன்தினம் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், தமிழகத்தின் ரஞ்சித் 6 - 2, 2 - 6, 6 - 2 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வீரர் சாஹேப் ஜி சோதியை வீழ்த்தினார்.இரட்டையர் பிரிவுகளில் தமிழகத்தின் ஓகேஸ் தேஜோ, கர்நாடகா வீரர் அக்ஷத் அணியினர் 6 - 3, 6 - 4, என்ற செட் கணக்கில் தமிழக வீரர்கள் ஆரியன், பிரணவ் ஆகியோரை வீழ்த்தினார்.வெற்றி வீரர்களுக்கு, ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி