உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைவரும் பூமியை காக்க உறுதியேற்ற மாணவர்கள்

அனைவரும் பூமியை காக்க உறுதியேற்ற மாணவர்கள்

கோவை: ஆர்.எஸ்.புரம், கிக்கானி வித்யா மந்திர் பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் துஷார் கிக்கானி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிறு துளி அமைப்பினை சேர்ந்த தருண் ஷா, பஞ்சபூதங்களின் முக்கியத்துவம், அவற்றை மாசுபடுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புவியை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.பயன்படுத்திய பிளாஸ்டிக்கை கொண்டு, பூக்குடுவை, குப்பை தொட்டி, மேசை போன்ற வீட்டு உபயோக பொருட்கள் செய்வது குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.பூமியின் முக்கியத்துவம் பற்றியும் பூமியைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றியும் மாணவர்கள் உரையாற்றினர். புவியை காப்போம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. மரங்கள் நடுவோம், தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோம், பூமியைக் காப்போம் என்று அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை