உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூகசேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூகசேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை;பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்ததன் அடிப்படையில், சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் பிரிவுகளில் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படுகிறது.இதற்கு, தமிழ்நாட்டில் பிறந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம். https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.தகுதியுடையவர்கள், ஜூன் 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன் உரிய சான்றிதழ்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள, சமூகநலத்துறையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி