| ADDED : ஏப் 28, 2024 02:05 AM
கோவை;சிறுநீர் கழித்ததால் ஆட்டோ டிரைவர்கள், வாலிபர்கள் மோதி கொண்டனர்.சென்னையைச் சேர்ந்த வாலிபர்கள், 7 பேர் ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். ஈஷா சென்று விட்டு, மீண்டும் சென்னை செல்ல கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர்.அப்போது அவர்களில் ஒருவர், ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே, சிறுநீர் கழித்துள்ளார். இதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. சென்னை வாலிபர்களும், ஆட்டோ டிரைவர்களும் தாக்கிக் கொண்டனர். இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, அந்த வாலிபர்கள் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றனர். இரு தரப்பினரும் மோதி கொள்ளும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு சிலர், 'ஒன்னுக்கு இருந்தது ஒரு தப்பாடா, கோவையன்ஸ் வர, வர மதுரைகாரங்க போல மாறிட்டிங்களே...' என, கமென்ட் செய்து வருகின்றனர்.