உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

பெ.நா.பாளையம் : கோவை வனச்சரகத்துக்குட்பட்ட தடாகம் பகுதியில் காட்டுப் பன்றி இறைச்சியை விற்க முயன்ற இரண்டு பேருக்கு, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள மாங்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, காட்டுப்பன்றி சாலை ஓரத்தில் இறந்து கிடந்தது. தடாகம் குட்டை வழியை சேர்ந்த மருதாசலம், ரங்கநாதன் ஆகியோர் யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அதை எடுத்துச் சென்று வெட்டி, இறைச்சியை விற்க முயற்சி செய்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வனப் பணியாளர்கள், அங்கு சென்று, இருவரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த, 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். இருவருக்கும், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ