உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் மறியலுக்கு முயற்சி; தடுத்து நிறுத்திய போலீசார்

ரயில் மறியலுக்கு முயற்சி; தடுத்து நிறுத்திய போலீசார்

கோவை : மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களுக்கு எதிராக, கோவை வக்கீல்கள் நேற்று ரயில் மறியல் செய்ய ஊர்வலமாக சென்ற போது, போலீசார் தடுத்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு, வக்கீல்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரத்து செய்யக்கோரி, தொடர் புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, ரயில் மறியல் செய்வதற்காக, கோவை வக்கீல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வமாக புறப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், பார் கவுன்சில் இணை தலைவர் அருணாசலம், கோவை வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ