உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!

கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில், கத்தரி மற்றும் வெண்டைக்காய் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு குறித்து தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இதில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுவது வழக்கம். இதை தடுக்க கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வெண்டையை வளர்ப்பதன் வாயிலாக தத்து பூச்சியினை கட்டுப்படுத்தலாம். கத்தரி மற்றும் வெண்டையில் வரப்பு ஓரத்தில் சோளம் வளர்ப்பதால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 மில்லி அசாடிராக்ட்டின் கலந்து தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.நடவின் போது, பேசில்லஸ் சப்டிலிஸ், 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் வேர்களை, 30 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ