உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறநகர் குறுமைய விளையாட்டில்  அவிநாசிலிங்கம் மாணவியர் ஆகா

புறநகர் குறுமைய விளையாட்டில்  அவிநாசிலிங்கம் மாணவியர் ஆகா

கோவை : புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட விளையாட்டு போட்டி, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் நடக்கிறது. இதன் மாணவியர் பிரிவில், அவிநாசிலிங்கம் பள்ளி மாணவியர் சிறப்பாக விளையாடினர். மாணவ மாணவியருக்கு, குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன. புறநகர் குறுமைய போட்டிகள், மதர்லேண்ட் பள்ளி சார்பில் கடந்த 30ம் தேதி முதல் நடக்கிறது. முதல் நாள் மாணவியருக்கான கேரம், இறகுப்பந்து போட்டியும், நேற்று மாணவர் பிரிவு கேரம், இறகுப்பந்து போட்டியும் நடத்தப்பட்டது.

அவிநாசிலிங்கம் அசத்தல்

இதன் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான, இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் அவிநாசிலிங்கம் பள்ளியின் அதிசா, ஜெயரெனிசா ஜோடி முதலிடமும்; 19 வயது பிரிவு இரட்டையர் பிரிவில் நிவேதா, பிரகதி ஜோடி முதலிடம், ஒற்றையர் பிரிவில் பிரகதி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை நளினி, உடற்கல்வித்துறையினர் வேல்மதி, கோமதி ஆகியோர் வாழ்த்தினர். தொடர்ந்து, நேற்று மாணவர்கள் பிரிவு கேரம் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி