மேலும் செய்திகள்
உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
6 hour(s) ago
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
6 hour(s) ago
இன்று இனிதாக பொள்ளாச்சி
6 hour(s) ago
மேட்டுப்பாளையம் : சாமியார் வேடமிட்டு யாசகம் பெறுவது போல் நடித்து, கூரியர் கடையில் பெண் ஊழியரின், மொபைல்போனை இருவர் திருடி சென்றனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் கவர்களை அந்தந்த முகவரிக்கு அனுப்புவதற்காக, முகவரி பார்த்து பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு யாசகம் பெறுவது போல், சாமியார் வேடத்தில் வந்த இருவர், பெண் ஊழியரிடம் யாசகம் பெறுவது போல பேசி நடித்தனர். பெண் ஊழியர் அசந்த நேரத்தில், கண்ணிமைக்கும் நொடியில், ஊழியரின் விலை உயர்ந்த மொபைல்போனை அந்த நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச்சென்றனர்.அவர்கள் சென்றபிறகு தான், அந்த பெண் ஊழியருக்கு தனது மொபைல்போன் திருடு போனது தெரியவந்தது. கடையின், 'சிசிடிவி' காட்சிகளை பார்த்த போது, சாமியர் வேடமிட்ட இருவர் தான் அந்த மொபைல்போனை திருடியது உறுதி செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago