உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகள், அடுத்தாண்டு முதலாம் வகுப்பில் சேர்க்க வேண்டி தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் பொதுமக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'இதுவரை, 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்; முதலாம் வகுப்பில் ஏழு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களையும் இப்பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி