உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

வால்பாறை:வால்பாறையில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.வால்பாறை கேர்.டி., அறக்கட்டளை சார்பில் வளரிளம் பெண்களுக்கான மனித வள மேம்பாட்டு பயிற்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், அக்கறை அறக்கட்டளை இயக்குனர் பிருத்விராஜ், பேராசிரியர் வெங்கடேஷன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.வளரிளம் பெண்கள் சுயதொழில் வாயிலாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். பெண்கள் சுதந்திரமாக பணியாற்ற மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு வகையான பாதுகாப்பு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த பிரச்னையானாலும் எதிர்கொள்ள பெண்கள் தயாராக வேண்டும். பிரச்னைகளை கண்டு ஒரு போதும் துவண்டுவிடக்கூடாது, என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், சமூக பணியாளர் கார்த்திகா, தையல் ஆசிரியர் ஞானத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை