உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு

100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் மற்றும் பேரூர் பேரூராட்சிகளில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.தமிழகத்தில் வரும் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தேர்தல் குறித்தும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, சேரன், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பேரணி சென்றனர்.தொண்டாமுத்துார் பேரூராட்சியில், பேரூராட்சி அலுவலகம் முன், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் கோலம் வரைந்தும், தெரு நாடகம் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, தொண்டாமுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவியர், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி