உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆ குறுமைய டெனிகாய்ட் கணபதி அரசு பள்ளி பர்ஸ்ட்

ஆ குறுமைய டெனிகாய்ட் கணபதி அரசு பள்ளி பர்ஸ்ட்

கோவை:கோவை கல்வி மாவட்டம், 'ஆ' குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான டெனிகாய்ட் போட்டியில், கணபதி அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், பல்வேறு பள்ளிகள் சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் 'ஆ' குறுமைய விளையாட்டுப் போட்டிகள், சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி சார்பில் நடக்கின்றன. டெனிகாய்ட் போட்டி சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்தது.

மாணவர் பிரிவு

ஒற்றையர் 14 மற்றும் 17 வயது பிரிவில், கணபதி அரசுப்பள்ளி அணி முதலிடமும், டிரினிட்டி பள்ளி இரண்டாம் இடமும், 19 வயது பிரிவில் எஸ்.இ.எஸ்., பள்ளி முதலிடமும், டிரினிட்டி பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன. இரட்டையர் 14 மற்றும் 19 வயது பிரிவில், கணபதி அரசு பள்ளி அணி முதல் இடம், டிரினிட்டி பள்ளி இரண்டாம் இடம், 17 வயது பிரிவில் கணபதி அரசு பள்ளி முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன.

மாணவியர் பிரிவு

ஒற்றையர் 14 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில் பி.ஆர்., சித்தா நாயுடு முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம், 19 வயது பிரிவில் கணபதி அரசு பள்ளி முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன.

இரட்டையர் பிரிவு

14 வயது பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம், 17 வயது கணபதி அரசு பள்ளி அணி முதலிடம், பி.ஆர்., சித்தா நாயுடு இரண்டாமிடம், 19 வயது பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம், கணபதி அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. இப்போட்டியில் முதலிடம் பிடித்த அணிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை