உள்ளூர் செய்திகள்

காமராஜர் பிறந்த நாள்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின், 120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிச்செயலாளர் ரமேஷ்ராஜ்குமார், தலை மை வகித்தார். முன்னதாக, பள்ளி முதல்வர் சந்திராவதி, அனைவரையும் வரவேற்றார். விழாவில், மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து, வண்ணக் கோலப்பொடியால், காமராஜரின் உருவப்படம் வரைந்து அசத்தினர். தவிர, அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித் தாளார் சாந்திதேவி, காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கிப் பேசினார்.பள்ளி நிர்வாக இயக்குர் ஸ்ரீரிதன்யா, பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் சிந்து, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ