உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு நாளை நடக்கிறது சான்றிதழ் சரிபார்ப்பு

இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு நாளை நடக்கிறது சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை:இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கோவை வேளாண் பல்கலையில் நாளை நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், பல்கலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், கலந்தாய்வு கட்டணமாக ரூ.200 (பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்) மற்றும் ரூ.100 (ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் செலுத்த வேண்டும்.மாணவர்களின் மேல்நிலைத்தேர்வு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் நிஜ சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவற்றை சான்றிதழ் சரிபார்ப்பன்றே முதன்மையர் வசம் (வேளாண்மை) சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின், சேர்க்கை கட்டணமாக ரூ.5000 பல்கலை வளாகத்தில் நேரில் அல்லது 31ம் தேதிக்குள் இணையம் வழியாக செலுத்த வேண்டும்.சேர்க்கை கட்டணத்தை, மாணவர்கள் தங்கள் யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, http://tnagfi.ucanapply.comஎன்ற இணையதளத்தில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினாலோ அல்லது சேர்க்கை கட்டணம் செலுத்த தவறினாலோ, சேர்க்கை ரத்தாகிவிடும். ரத்தான இடங்கள், அடுத்தடுத்த இடஒதுக்கீடு வாயிலாக நிரப்பப்படும். இடஒதுக்கீட்டை தவறவிட்டவர்களுக்கு, மறுவாய்ப்பு வழங்கப்படாது. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயன்பாட்டில் உள்ள 94886 35077, 94864 25076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், tnau.ac.inஎன்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி