உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மேட்டுப்பளையம் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை மேட்டுப்பளையம் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை;கோவை ரயில்வே யார்டில் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால் 13 ம் தேதி ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 9:05 மணிக்கு கோவை வந்தடையும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (06009), மற்றும் காலை 11:40 மணிக்கு கோவை வரும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (06813) 13ம் தேதி வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படுகின்றன. கோவை வழியாக இயக்கப்பட இருந்த ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) 13ம் தேதி போத்தனுார் இருகூர் வழியாக இயக்கப்படுகிறது. இது போத்தனுாரில் நின்று செல்லும்.கோவை வழியாக இயக்கப்பட இருந்த எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12678), 13ம் தேதி போத்தனுார் இருகூர் வழியாக இயக்கப்படுகிறது. அதனால் இந்த ரயில் போத்தனுாரில் நிறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ