உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் முகாம்; துணை கலெக்டர் புது உத்தரவு

மக்களுடன் முதல்வர் முகாம்; துணை கலெக்டர் புது உத்தரவு

அன்னூர்;'மக்களுடன் முதல்வர் முகாமில், குறைந்தபட்சம், 50 பேருக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும்' என துணை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :'மக்களுடன் முதல்வர்' முகாம், கோவை மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில், ஏழு இடங்களில் முடிந்துள்ளது. இன்னும் 55 இடங்களில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு முகாமிலும், கட்டுமான தொழிலாளர், உடல் உழைப்பு தொழிலாளர், அமைப்பு சாரா ஓட்டுநர், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல் கலைஞர்கள், கைவினைஞர்கள், பனைமரத் தொழிலாளர்கள் கைத்தறி நெசவாளர்கள், பொற் கொல்லர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட 18 வாரியங்களை சேர்ந்த, குறைந்தபட்சம் 50 பேருக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ