உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் ஊழியரிடம் சில்மிஷம்; போஸ்ட் மாஸ்டருக்கு குத்து

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; போஸ்ட் மாஸ்டருக்கு குத்து

போத்தனூர்:போத்தனூர் அருகே ஒரு தபால் அலுவலகத்தில், சூலூர் காடம்பாடியை சேர்ந்த விஜயகுமார், 44, போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். இதே அலுவலகத்தில், ஒரு பெண் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, பெண் ஊழியர் பணியிலிருந்தார். அப்பகுதிக்கு சென்ற விஜயகுமார், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் பெற்றோரிடம் கூறினார். இதையறிந்த பெண்ணின் உறவினர், விஜயகுமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.பெண்ணின் பெற்றோர் புகாரில், போத்தனூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். கத்தியால் குத்திய உறவினரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ