மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
2 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
2 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
2 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி கருப்பராய சுவாமி கோவிலில், சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.நாளை (7ம் தேதி) காலை, 9:00 மணிக்கு மடத்துக்குளம், கடத்துார் சிவன் கோவிலில் தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 6:00 மணிக்கு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.8ம் தேதி காலையில், பொங்கல், மாவிளக்கு மற்றும் அபிேஷக ஆராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்தல் மற்றும் திருத்தேர் திருவீதி உலா வருதல், அலகுகுத்தி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.9ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி பூஜை, இரவு, 1:00 மணிக்கு சக்தி கலசம் ஆற்றில் இறங்குதல் நிகழ்ச்சியும், 10ம் தேதி காலை, 12:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு, 7:00 மணிக்கு மஹா அபிேஷகம், இரவு, 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago