| ADDED : ஜூலை 19, 2024 02:52 AM
கோவை;கொடிசியா வளாகத்தில், புத்தகத் திருவிழா இன்று துவங்குகிறது.மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில், 8வது ஆண்டாக, கோவை புத்தகத் திருவிழா இன்று துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து 285 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான தலைப்புகளில், சிறப்புத் தள்ளுபடி விலைகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல், மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடக்கின்றன. தினமும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.பள்ளி மாணவர்கள் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்க விழா இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் திறப்புவிழா நிகழ்வில் பங்கேற்கின்றனர்.நாளை காலை 11: 00 மணி முதல் இரவு8:00 மணி வரை கண்காட்சி நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம். புத்தக கண்காட்சிக்கு வருவோருக்காக, அவிநாசி சாலையில் இருந்து, இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.