உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!

பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!

-நமது நிருபர்-கோவை நகரம் விரிவடைந்து வருவதால், புதிய வழித்தடங்களில் டவுன்பஸ் அல்லது மினிபஸ்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவை நகரின் வளர்ச்சி காரணமாக, மாநகராட்சியாக வரையறுக்கப்பட்டுள்ள 254 சதுர கி.மீ., பரப்பளவைத் தாண்டி, சுற்றிலும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துப் பகுதிகள், கோவையுடன் பின்னிப்பிணையும் அளவுக்கு, புதிய குடியிருப்புகளும், வணிகப்பகுதிகளும் பெருகியுள்ளன.அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களைத் தவிர, சென்னையைப் போல, கோவையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் எதுவுமில்லை.அதனால், புதிதாக உருவாகியுள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்களும், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மற்றும் சொந்த வாகனங்களையே நம்பியுள்ளனர்.

பல ஆண்டுகளாக முடக்கம்

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கொண்டு வரப்பட்ட மினிபஸ் திட்டம், பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த மினிபஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.சேவையுள்ள வழித்தடங்களில் 8 கி.மீ., சேவையில்லாத வழித்தடங்களில் 18 கி.மீ., அதிகபட்சமாக 25 கி.மீ., துாரத்துக்கு, புதிய மினி பஸ்களை இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதிலும் சென்னைக்கு முன்னுரிமை அளித்து, எந்தெந்த வழித்தடங்களில் மினிபஸ்களை இயக்கலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதாகி வருகிறது கோவை

கோவை நகரமும் நாலாபுறங்களிலும் விரிவடைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளுக்கும் புதிய வழித்தடங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளது.இவற்றில் பல பகுதிகளுக்கு, அரசு டவுன்பஸ்களை இயக்கினாலே, பெருமளவில் வரவேற்பும், வருவாயும் கிடைக்கும்.ஒரு சில பகுதிகளில், மினி பஸ்களை இயக்க வேண்டுமென்று பொது மக்களே கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் கவுன்சிலர்களும், இதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர்.

விண்ணப்பம் வரவில்லை

ஆனால் நேற்று வரை, கோவையில் புதிய திட்டத்தில் மினிபஸ்களை இயக்குவதற்கு அனுமதி கோரி, ஒரு விண்ணப்பமும் வரவில்லை என்று, கோவை இணை போக்குவரத்து கமிஷனர் சிவகுமார் தெரிவித்தார்.ஒரு வேளை விண்ணப்பங்கள் வராவிடினும், புதிய வழித்தடங்களை உருவாக்கி, டவுன்பஸ் அல்லது மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் முக்கியக்கடமை.அதற்கு போக்குவரத்துத்துறை, போக்குவரத்துக்கழகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை ஒருங்கிணைத்து திட்டம் வகுப்பது அவசியம்!

மினி பஸ் இயக்கணும்?

n போத்தனுார் ரயில் கல்யாண மண்டபத்திலிருந்து, நஞ்சுண்டாபுரம், லட்சுமி மில்ஸ் வழியாக பாப்ப நாயக்கன்பாளையம் வரையும், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆத்துப்பாலம், குனியமுத்துார் வழியாக கோவைப்புதுார் வரையும், போத்தனுார் சந்திப்பிலிருந்து சுந்தராபுரம் வழியாக ஒத்தக்கால் மண்டபம் வரையும், மினிபஸ் வேண்டும்.n சுந்தராபுரத்தில் இருந்து போத்தனுார், வெள்ளலுார் வழியாக சிங்காநல்லூர் வரையிலும், மினி பஸ் இயக்க வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்து, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு மக்கள் வருவதற்கு இது உதவியாக இருக்கும் என்று, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கம் கூறியுள்ளது.n இதேபோல, கணபதியிலிருந்து சரவணம்பட்டி வழியாக கீரணத்தம், கவுண்டம்பாளையத்திலிருந்து வெள்ளக்கிணறு வழியாக சரவணம்பட்டி, காந்திபுரத்திலிருந்து வடவள்ளி, ஓணாப்பாளையம் வழியாக தொண்டாமுத்துார், பீளமேட்டிலிருந்து கொடிசியா வழியாக விளாங்குறிச்சி உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கும் அரசு டவுன்பஸ்கள் அல்லது மினிபஸ்களை இயக்க வேண்டியது, மிக அவசியமாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Prakash Babu
ஜூன் 25, 2024 22:25

காந்திபுரம் டு சேரன் மாநகர், விளாங்குறிச்சி, விநாயகபுரம்,பீளமேடு ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு மினி பஸ் விடலாம்


Kanakaraj
ஜூன் 25, 2024 18:01

துடியலூரில் இருந்து அப்பநாயக்கன்பாளையம், பழனிகவுண்டன் புதூர்,பன்னிமடை,தொப்பம்பட்டி,கதிர்நாயக்கன்பாளையம், பூச்சியூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையாக மினிபஸ் இருந்தால் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது


Jayapal R
ஜூன் 25, 2024 12:12

பேரூர் மெயின் ரோட்டில், தெலுங்கு பாளையம் பிரிவு முதல், சிவாலயா ஜங்ஷன் வரை பஸ் ஷெல்டர்கள் கட்டப்படவே இல்லை. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனளிக்கும் ரூட்டிலேயே இந்த நிலை. கார்ப்பரேஷன் கண் விழிக்குமா, உறக்கத்திலிருந்து?


R Jayapal
ஜூன் 25, 2024 11:56

பேரூர் பகுதி ஜனத்தொகை மிக மிக அதிகரித்து வருகிறது. செல்வபுரம் வழியாக, பேரூர் - ஆர் எஸ் புரம், பேரூர் -மருத மலை பஸ்/மினி பஸ்கள் மிக மிக அவசியம்.


R Jayapal
ஜூன் 25, 2024 11:24

Perur is a fast developing suburb. Satellite bus terminus can be developed here. Perur to RS Puram, Perur to Marudhamalai buses or small buses are very much needed immediately.


Jayapal R
ஜூன் 25, 2024 12:14

செல்வபுரம் வழியாக இயக்கப்பட வேண்டும்.


Thendral Illam
ஜூன் 25, 2024 07:45

சிறுமுகை அன்னூர் சரவணம்பட்டி வழியாக காந்திபுரத்திற்கு பஸ் இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Ilayaraja
ஜூன் 25, 2024 06:29

சரவண பட்டியில் இருந்து துடியலூர் வடவள்ளி வழியாக மருதமலைக்கு பேருந்து விடலாம்.. மருத மலையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு பேருந்து விடலாம்.. எங்கே செல்வதாக இருந்தாலும் காந்திபுரம் சென்று தான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றலாம்.. 1c என்னும் பேருந்தை சிங்கா நல்லூரில் இருந்து மருதமலை வரை இயக்கலாம்.. ஒண்டிபுதூர் செல்வதை நீக்கி விட்டு... அதன் தொடர்ச்சியாக சிங்கா நல்லூரில் இருந்து பல்லடம் வரை பேருந்து இயக்கலாம். ஒண்டிப்புதூர் இருகூர் வழியாக இருகூர் ரயில் நிலையத்தை விரிவு படுத்தலாம்.. அதோடு விட்டு விடாமல் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைக்கும் வகையில் பேருந்து இயக்கலாம்.. போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒவ்வொரு தடத்திலும் செல்லும் பேருந்தில் பயணம் செய்து மக்கள் படும் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.. பொதுநலம் விரும்பி கோவை வாசி..


Subramanian Iyer
ஜூன் 25, 2024 04:35

கோவை ஐஸ் நோட் எ சிட்டி .இட் ஐஸ் ஒன்லி எ டெவெலப்பட வில்லேஜ் ஒன்லி காபி ஷாப் இட்லி ஷாப் தோசை ஷொப்ஸ் ஆர் மோர் .இட் ஐஸ் எ விள்ளகே


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ