உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோயம்புத்துார் மராத்தான்; முன்பதிவு துவக்கம்

கோயம்புத்துார் மராத்தான்; முன்பதிவு துவக்கம்

கோவை : கோவையின் மிகப்பெரிய மராத்தான் போட்டியான, 'கோயம்புத்துார் மராத்தான்' போட்டிக்கான முன்பதிவு துவங்கியது.கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன், வாக்கரூ சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கோயம்புத்துார் மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 12வது பதிப்பு டிச., 15ம் தேதி நடக்கவுள்ளது. ஆண்டுதோறும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்பர்.மராத்தான் வாயிலாக திரட்டப்படும் நிதி, புற்று நோய் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.அரை மராத்தான் (21.1 கி.மீ.,), 10 கி.மீ., ஓட்டம், 5 கி.மீ., ஓட்டம் மற்றும் 5 கி.மீ., நடை ஆகியவை இந்தாண்டு நடத்தப்படுகின்றன.வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கம், பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.மேலும் விவரங்களுக்கு: coimbatoremarathon.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை