உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய தடகள போட்டியில் கோவை வீராங்கனை தங்கம் 

தேசிய தடகள போட்டியில் கோவை வீராங்கனை தங்கம் 

கோவை;ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான தடகளப்போட்டியில், கோவையை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றார். ஹரியானா தடகள சங்கம் சார்பில், 63வது தேசிய, மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா 'தவ் தேவி லால் ஸ்டேடியத்தில், ஜூன் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது.இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து, நுாற்றுக்கணக்கான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ.,1500மீ., 500மீ.,10,000மீ., ஓட்டப்பந்தயம், நடையோட்டம், தடை தாண்டும் ஓட்டம், ஸ்டீபிள் சேஸ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் த்ரோ உள்ளிட்ட அனைத்து விதமான தடகளப்போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில், தமிழக அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை 122 புள்ளிகளுடன், ஹரியானா மாநில அணி கைப்பற்றியது. இதில் கோவை சார்பில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும் ஒலிம்பா ஸ்டெபி 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்றார். இதன் இறுதிப்போட்டியில், 59.43 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை, தமிழக தடகள சங்கம், கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லுாரி நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி