உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மதுரை, திருப்பூருக்கு இட மாற்றம்

மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மதுரை, திருப்பூருக்கு இட மாற்றம்

கோவை, : கோவை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் நான்கு பேர், மதுரை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், மாநகராட்சிகளில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களில், முதல்கட்டமாக, 17 பேரை, வெவ்வேறு மாநகராட்சிகளுக்கு இட மாறுதல் செய்து, துறையின் முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன் மற்றும் திருமால் ஆகியோர் மதுரை மாநகராட்சிக்கும், சுகாதார அலுவலர்கள் பரமசிவம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சிக்கும் இட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பதிலாக, மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் வீரன் மற்றும் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் முருகன் ஆகியோர் கோவை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை