உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருத்தி கொள்முதல் சைமா அட்வைஸ்

பருத்தி கொள்முதல் சைமா அட்வைஸ்

கோவை;'நுாற்பாலைகள் மற்றும் மில்கள் உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காகவும், பருத்தி கொள்முதல் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று சைமா அறிவுறுத்தியுள்ளது.சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்) தலைவர் சுந்தர்ராமன் அறிக்கை:பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான குழு, பருத்தி சீசன் 2023-2024க்கான இரண்டாவது கூட்டத்தில் விவாதித்த விபரம் வருமாறு: பருத்தி துவக்க இருப்பு 61 லட்சம் பேல்கள், பருத்தி பயிர் உற்பத்தி 323 லட்சம் பேல்கள், இறக்குமதி 12 லட்சம் பேல்கள், மில்நுகர்வு 301 லட்சம் பேல்கள், மில்கள் அல்லாத நுகர்வு 16 லட்சம் பேல்கள், ஏற்றுமதி 27 லட்சம் பேல்கள், இறுதி இருப்பு 52 லட்சம் பேல்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீடுகள் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளதால், பருத்தி தொடர்பான விஷயங்களில், பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான குழுவின் தரவுகளை, பருத்தியை பன்படுத்துவோர் எச்சரிக்கையாகவும் நம்பகத்தன்மையோடும் இருக்க வேண்டும். உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காகவும், பருத்தி கொள்முதல் செய்யும் போது நுாற்பாலைகளும், மில்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் சுந்தர்ராமன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை