உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

--பணம் பறித்தவர் கைது

கோவை கந்தசாமி வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருபவர் ஜான் பீட்டர். இவர் நேற்று முன்தினம், இப்பகுதியில் நடந்து சென்ற போது, வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.200 பறித்து தப்பினார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்த கரும்புகடையை சேர்ந்த ரிஸ்வான், 33 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

--லேப் டாப்கள் திருட்டு

கோவை சரவணம்பட்டியில் அறை எடுத்து, நண்பர்களுடன் தங்கிருந்து, அரசு கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வருபவர் திஜேஷ் சச்சின். நேற்று முன்தினம் அறையை பூட்டி விட்டு சாவியை ஷூ பெட்டியில் வைத்து கல்லுாரிக்கு சென்றார். திரும்பி வந்த போது, அறையில் இருந்த இரண்டு லேப் டாப், மொபைல் போன் திருட்டு போயிருந்தது தெரிந்தது. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற மூவர் கைது

கோவை செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் பண்ணாரியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில், அங்கு நின்றிருந்த பூசாரி பாளையத்தை சேர்ந்த சரண், 37, செல்வபுரத்தை சேர்ந்த அப்துல் சபீர், 23, சூரியபிரகாஷ், 26 ஆகியோரை சோதனையிட்டனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; இவர்களை கைது செய்தனர். ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை