உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்துள்ளனர் விவசாயிகள். அறுவடை செய்யப்படும் வாழைத்தார், தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. வாழைத்தார் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்ததால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மார்க்கெட்டில், செவ்வாழை (ஒரு கிலோ) - 80, கதளி - 50, ரஸ்தாளி - 50, நேந்திரன் - 55, பூவன் - 45, சாம்பிராணி வகை - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட, செவ்வாழை, கதளி, பூவன் போன்றவைகள் 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி, நேந்திரன் - 5 ரூபாயும், ரஸ்தாளி அதிகபட்சமாக 15 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'உள்ளூர் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து இருந்தது. மொத்தத்தில் வாழைத்தார் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ