உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை துறை ரீதியான அதிகாரிகள் தீவிரம்

குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை துறை ரீதியான அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி;முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில், குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில், நகர மற்றும் ஊரக பகுதிகளில், கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, 20 நாட்களில், ஒன்பது பேர் பலியாகினர்.நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கு, குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததும் தான் பாதிப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அதிகாரிகளுடன் இணைந்து, இதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல, மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், 0.2 பி.பி.எம்., முதல், 0.5 பி.பி.எம்., அளவில் குளோரின் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.மழை அதிகரித்தால், 1.0 பி.பி.எம்., அளவில் குளோரின் சேர்க்கப்படும். மேலும், குடிநீர் குழாய் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை