மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
5 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
5 hour(s) ago
தேசிய நூலக வார விழா
5 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
5 hour(s) ago
கோவை:கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும், டில்லி, தேசிய மாற்றுத் திறனாளி நிதி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் விழா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், 52 பேர், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 41 பேர் என, 93 பேருக்கு ரூ.1.38 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டது. தையல் கடை, கல்வி உபகரணப் பொருட்கள் கடை, துணி வியாபாரம் போன்ற சிறு, குறு தொழில்கள் மேற்கொள்ள, இக்கடன் வழங்கப்பட்டது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி, தேசிய மாற்றுத்திறனாளி நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் உதவி பொதுமேலாளர் சங்கர் சர்மா ஆகியோர் பயனாளிகளுக்கு உதவி வழங்கினர். பயன்படுத்த அழைப்பு
இவ்வங்கியில், தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நிரந்தர வைப்புகளுக்கு அதிகபட்சமாக, 8.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும் வைப்புகளுக்கு கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.மகளிர் உரிமைத் தொகை, தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தில் தொகை பெறும் பயனாளர்களின் தொடர் வைப்புகளுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுவதால், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago