உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின், கல்வி நலனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 64 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சொக்கனூர் ஊராட்சி தலைவரும், பி.டி.ஏ., தலைவருமான திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர் கூறுகையில், ''சொக்கனூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள சைக்கிள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை