உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்

வால்பாறை : வால்பாறையில், பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.காடம்பாறை, மரப்பாலம், கருமுட்டி, ஈத்தக்குழி ஆகிய செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன் பின், வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில், கல்லார் குடி, நெடுங்குன்று, உடுமன்பாறை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மழை கால நிவாரண பொருட்கள் மற்றும் முதியோர் உதவித்தொகைக்கான சான்றிழ்கள் வழங்கினார்.பழங்குடியின மக்கள் கூறுகையில், 'ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகையும் நேரில் வழங்கப்பட வேண்டும். செட்டில்மென்ட் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,' என்றனர்.சப்-கலெக்டர் பேசும் போது, 'பழங்குடியின மக்களின் குறைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். உதவித்தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.விழாவில், தாசில்தார் வேல்முருகன் (பொ), பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ரேணுகாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை