உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துவரை ரகம் வேண்டுமா! வேளாண் துறை அழைப்பு

துவரை ரகம் வேண்டுமா! வேளாண் துறை அழைப்பு

ஆனைமலை;ஆனைமலை வட்டாரத்தில் தென்னந்தோப்புகளில் வரப்புகளில் வரிசையாக மூன்றடி இடைவெளியிலும், நிலக்கடலை பயிரில் ஊடுபயிராகவும் விதைப்பு மேற்கொள்ள, சான்று பெற்ற உயர்விளைச்சல் துவரை 'கோ 8' ரகம் ஆனைமலை வேளாண் துறையால் பரிந்துரைப்படுகிறது.இப்பயிர் குறைவான மழையில் அதிகபட்சமாக, செடிக்கு மூன்று கிலோ விளைச்சல் தரக்கூடியது. இது ஆணி வேருடைய பயிராக இருப்பதால் தென்னங்கன்றுக்கு பாதுகாப்பானது.பயிரின் வயது, 180 நாட்கள், குழிக்கு இரண்டு விதைகள் இரண்டு செ.மீ ஆழத்தில் விதைத்து, மார்கழி மாதத்தில் அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு ஊடுபயிராக பயிரிட, இரண்டு கிலோ விதை போதுமானதாகும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் கிலோ, 50 ரூபாய்க்கு, ஆனைமலை வட்டார விரிவாக்க மையத்தில் தற்போது விநியோகிக்கப்படுகிறது. இத்தகவலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி