உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்

வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்

உடுமலை : பி.ஏ.பி., வாய்க்கால் பராமரிப்புக்கான நிதியை, நேரடியாக பாசன சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டம் பகிர்மான குழு எண்: 7-ன் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது. திட்ட உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள், விவசாயிகள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றுவதற்குப்பதிலாக, காண்டூர் கால்வாய் வாயிலாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.மேலும் அணை நிரம்பிய பின், சூழ்நிலைக்கேற்ப நீர் திறந்து விட உரிய முன்னேற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பகுதிக்கும் சீரான முறையில் நீர் வழங்க வேண்டும்.நீர் திறப்புக்கு முன்பே, கால்வாய்கள் துார் வாரி சுத்தப்படுத்த வேண்டும். வாய்க்கால் பராமரிப்புக்கான நிதியை நேரடியாக சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ