உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேல்நிலை நீர் தொட்டிகளில் கேமரா பொருத்த வலியுறுத்தல்

மேல்நிலை நீர் தொட்டிகளில் கேமரா பொருத்த வலியுறுத்தல்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, கிராமங்களில் மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் தரை மட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.இந்த தொட்டிகளில் இருந்து மக்களுக்கு குடிநீர் மற்றும் கிணறு, போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு காலி மது பாட்டில்களை, இந்த மேல்நிலை தொட்டிக்கு கீழ் வீசி செல்வதும், பிளாஸ்டிக் குப்பை, உணவு பொட்டலங்களை போடுவதும் வாடிக்கையாகிவிட்டது.இதனால், வாட்டர்மேன் தண்ணீர் மேல்நிலை தொட்டிகளில் இருந்து தண்ணீர் விடும் போது, உடைந்த காலி மது பாட்டில்களால் காயமடைகின்றனர்.சில கிராமங்களில் மேல்நிலை தொட்டிகளின் கீழ் குப்பை கொட்டுவது, செடிகளை அகற்றாமல் இருப்பது போன்ற காரணங்களால், சில சமூக விரோதிகள் காலி மது பாட்டில்களை வீசி செல்கின்றனர்.இதுமட்டுமின்றி, சிறுவர்கள் இந்த மேல்நிலை தொட்டியின் ஏணியில் ஏறி ஆபத்தை உணராமல் விளையாடுகின்றனர்.எனவே, இது போன்ற செயல்களை தவிர்க்க மேல்நிலை தண்ணீர் தொட்டிகளில் வெளிப்புறத்தில் கேமரா பொருத்தினால், மது அருந்துவது உள்ளிட்ட அத்துமீறல்களை கண்டறியலாம். அசம்பாவிதங்கள் தவிர்க்க நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை