உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடமாடும் நுாலகம் தேவை எஸ்டேட்களில் எதிர்பார்ப்பு

நடமாடும் நுாலகம் தேவை எஸ்டேட்களில் எதிர்பார்ப்பு

வால்பாறை;வால்பாறை எஸ்டேட் பகுதியில் நடமாடும் நுாலகம் கொண்டுவர வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகமும் செயல்படுகிறது.பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லை. ஆரம்ப காலக்தில் எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த மனமகிழ்மன்றமும் தற்போது மூடப்பட்டுள்ளது.இதனால் எஸ்டேட் பகுதி இளைஞர்கள் செய்தித்தாள்களை வாசிக்க முடியாமலும், நுால்களை படிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.இளைஞர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் இருந்த மனமகிழ் மன்றங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. தமிழக நுாலக துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் பயன்பெறும் வகையில், கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும். எஸ்டேட் பகுதி வாசகர்களின் நலன் கருதி நடமாடும் நுாலகம், வால்பாறைக்கு கொண்டுவர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை