உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இழப்பீடு வழங்கிய பின் பணிகளை தொடர விவசாயிகள் கோரிக்கை

இழப்பீடு வழங்கிய பின் பணிகளை தொடர விவசாயிகள் கோரிக்கை

சூலூர்:உரிய இழப்பீட்டை வழங்கிய பின், குழாய் பதிக்கும் பணியை தொடர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருகூரில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உரிய இழப்பீடு வழங்கிய பின் பணிகளை தொடர வேண்டும், என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பணிகளை நிறுத்தி விட்டு ஊழியர்கள் சென்றனர். நேற்று மீண்டும் பணிகளை செய்ய ஊழியர்கள் வந்தனர். இதையறிந்து அங்கு திரண்ட விவசாயிகள், பணியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள், சண்முகசுந்தரம், ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,' உரிய இழப்பீடு வழங்கிய பின் பணிகளை செய்ய வேண்டும், என, ஒரு மாதத்துக்கு முன்னரே, கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை. இழப்பீடு வழங்காமல் பணியை தொடர கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை