| ADDED : ஜூன் 25, 2024 12:15 AM
கோவை:கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், 29ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வார வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடத்தப்படும். வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பர். விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.லோக்சபா தேர்தல் காரணமாக, மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை, குறைகேட்பு கூட்டம் நடத்தவில்லை. தேர்தல் முடிந்து நன்னடத்தை விதிகள் தளர்வு செய்யப்பட்டதால், இம்மாத கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வரும், 29ம் தேதி (சனிக்கிழமை) காலை, 9:30 மணிக்கு உற்பத்தி குழு கூட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து, 10:30 மணி முதல் குறைகேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.