உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி

சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி

மேட்டுப்பாளையம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, ஆகிய பகுதிகளில் யானை, மான், கரடி, சிறுத்தை, புலி, போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.நேற்று மாலை சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட உளியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 9 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து உடனடியாக இதுகுறித்து வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் க்கு தகவல் அளித்தார்.இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் இறந்த பெண் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.முதற்கட்ட ஆய்வு அறிக்கையில், இரண்டு புலிகளுக்கு ஏற்பட்ட மோதலில் பெண் புலி இறந்து உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை