மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
2 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
2 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
2 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
2 hour(s) ago
கோவை;பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி, சரவணம்பட்டி விவேகம் பள்ளியில் நடந்தது. சரவணம்பட்டி விவேகம் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, 'விவேகம் சம்மர் டிராபி' ஐவர் கால் பந்து போட்டி நடந்தது. போட்டியை, பள்ளி இணை தாளாளர் நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து, சுமார் 50 அணிகள் பங்கேற்றன. இதில் மாணவர்களுக்கு 11, 13, 15 மற்றும் 17 ஆகிய வயது பிரிவுகளின் கீழ், போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற அணிகள்11 வயது பிரிவில், ஜெயேந்திரா பள்ளி முதலிடம், விவேகம் பள்ளி இரண்டாமிடம்; 13 வயது பிரிவில் என்.எஸ்.எஸ்., அகாடமி முதலிடம், விவேகம் இரண்டாமிடம்; 15 வயது பிரிவில் நோயஸ் அகாடமி முதலிடம், விவேகம் பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் அன்னூர் அகாடமி முதலிடம், விவேகம் பள்ளி இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago