உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி

கோவை;போக்கியத்துக்கு வீடு தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் குணசுந்தரி,54. இவரது மகன் புகைப்பட நிபுணராக பணிபுரிகிறார். அருகே, அருணாச்சலா காலனியை சேர்ந்த ராஜசேகரிடம், குணசுந்தரி நட்பு வைத்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் தன்னிடம் சரவணம்பட்டி மஹா நகரில் சொந்தமாக வீடு இருப்பதாகவும், ரூ.10 லட்சத்துக்கு போக்கியத்திற்கு விட்டை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வீட்டை குணசுந்தரிக்கு தரவில்லை. விளாங்குறிச்சியில் வேறு ஒரு வீட்டை ராஜசேகர் காண்பித்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, ராஜசேகருக்கு சொந்தமாக எந்த வீடும் இல்லை என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குணசுந்தரி சவரணம்பட்டி போலீசாரிடம் புகார் அளிக்க விசாரணை நடந்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை